அறிமுகம்
இலங்கையில் உயர் கல்வியை வழங்கும் பல்கலைக்கழகங்களில் பிரதானமாக தொழிநுட்பத் துறைக்கு என்று அறிமுகம் செய்யப்பட்ட உயர் கல்வி நிலையமே இந்த பல்கலைக்கழக கல்லூரி (University College) ஆகும்.
2015 ம் ஆண்டு காலப்பகுதியில் அறிமுகம் செய்யப்பட்ட இப் பல்கலைக்கழக கல்லூரிகள் இலங்கையில் பிரதானமான ஆறு மாவட்டங்களில் அமைந்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஆறு பல்கலைக்கழகங்களிலும் தொழிநுட்பத் துறைக்கு ஏற்ற பாடநெறிகள் நடைபெறுவதுடன் ஆறு பல்கலைக்கழக கல்லூரிகளிலும் 3500 க்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இப் பல்கலைக்கழக கல்லூரிகள் தற்போது இலங்கையின் உயர் கல்வி (Ministry of Higher Education) அமைச்சின் கீழும் வாழ்க்கை தொழிசார் தொழிநுட்ப பல்கலைக்கழகத்தின் (University of Vocational Technology) கீழும் நிருவகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இப் பல்கலைக்கழக கல்லூரிகளில் பிரதானமான 23 தொழிநுட்பத் துறைக்கு உரித்தான பாடநெறிகள் நடைபெறுவதுடன் இப் பாடநெறிகள் அனைத்தும் மூன்று வருட காலத்திற்குள் ஆறு மாத பயிற்சியுடன் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் ஒவ்வொரு பாடநெறியும் உயர் தேசிய டிப்ளோமா பாடநெறிகளாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment